தாக்க வீதம்

Grade 10 science tamil medium rate of reaction

ஓரலகு நேரத்தில் ஒரு இரசாயனத் தாக்கத்தின் விளைபொருள் தோன்றும் வீதம் அல்லது தாக்கி நுகரப்படும் வீதம் தாக்க வீதம் எனப்படும். ஒரு தாக்கம் நடைபெறுவதற்குத் தாக்கித் துணிக்கைகளுக்கிடையே ‘பயனுள்ள மோதல்கள்’ இடம்பெறுவது அவசியமாகும்.

தாக்க வீதத்தைத் தீர்மானிக்கும் பிரதான காரணிகள் நான்கு:

  1. தாக்கிகளின் செறிவு: செறிவு கூடும் போது துணிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து மோதல்கள் கூடும்.
  2. தாக்கிகளின் மேற்பரப்பளவு: தூளாக்கப்பட்ட நிலையில் மேற்பரப்பு அதிகமாக இருப்பதால் தாக்கம் விரைவாக நடக்கும்.
  3. வெப்பநிலை: வெப்பநிலை உயரும்போது துணிக்கைகளின் இயக்கசக்தி அதிகரித்து தாக்க வீதம் கூடும்.
  4. ஊக்கிகள்: இவை தாக்கத்தின் பாதையை மாற்றி, தாக்கத்தை விரைவுபடுத்த உதவும்.

இவற்றை அன்றாட வாழ்வில் உணவைப் பாதுகாத்தல் (குளிரூட்டிப் பயன்பாடு) மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பயன்படுத்துகிறோம்.

PDF Handout for this unit

Share With Your Friends!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *