மின்சுற்றொன்றின் ஊடாக மின்னேற்றங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் (I) எனப்படும், இது அம்பியர் (A) அலகால் அளவிடப்படும். இரு புள்ளிகளுக்கிடையிலான அழுத்த வேறுபாடு மின்னழுத்த வேறுபாடு (V ) எனப்படும். கடத்தியொன்றின் ஊடாக மின்னோட்டம் பாய்வதற்கு எதிராகக் கொடுக்கப்படும் தடை மின்தடை (R) ஆகும். ஓமின் விதியின்படி, ஒரு கடத்தியின் ஊடாகப் பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கிடையிலான அழுத்த வேறுபாட்டிற்கு நேர்விகித சமனாகும் (V = IR).
இவ்வலகில் மின்தடைகளை இணைக்கும் முறைகள் கற்பிக்கப்படுகின்றன:
- தொடர் இணைப்பு: மின்தடைகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கப்படும். இதில் மின்னோட்டம் மாறாது, ஆனால் அழுத்தம் பிரிக்கப்படும்.
- சமாந்தர இணைப்பு: மின்தடைகள் பொதுவான இரு புள்ளிகளுக்கிடையே இணைக்கப்படும். இதில் அழுத்தம் மாறாது, ஆனால் மின்னோட்டம் பிரிக்கப்படும்.
மேலும், மின்சக்தி மற்றும் மின்வலு கணக்கீடுகள் (P = VI) மற்றும் வீடுகளில் மின்சாரத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


Leave a Reply