நீர்க்கரைசலில் H+அயனிகளை விடுவிக்கும் பதார்த்தங்கள் அமிலங்கள் எனப்படும். இவை புளிப்புச் சுவையுடையவை, நீல லிட்மஸைச் சிவப்பாக மாற்றும். நீர்க்கரைசலில் OH– அயனிகளை விடுவிப்பவை மூலங்கள் எனப்படும் (நீரில் கரையும் மூலங்கள் காரங்கள்). இவை கைக்கு வழுவழுப்புத் தன்மையைத் தருவதுடன், சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றும். ஒரு கரைசலின் அமில அல்லது மூலத் தன்மையை அளவிட pH அளவீடு (0-14) பயன்படுத்தப்படுகிறது.
அமிலமும் மூலமும் ஒன்றுடன் ஒன்று தாக்கம் புரிந்து உப்பையும் நீரையும் தரும் செயல்முறை நடுநிலையாக்கல் எனப்படும்.
Acid + Base > Salt + Water
இவ்வலகில் அன்றாட வாழ்வில் அமில, மூலங்களின் பயன்பாடுகள் (உதாரணமாக: வயிற்று அமிலத்தன்மைக்கு மக்னீசியம் பால் பயன்படுத்தல்) மற்றும் மண்ணின் pH பெறுமானத்தைச் சீராக்குதல் போன்ற விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன.
PDF Handout For Unit 7

Leave a Reply