Category: G11 Video

  • கேத்திரகணித  ஒளியியல்

    கேத்திரகணித ஒளியியல்

    இவ்வலகு பிரதானமாக கோளவாடிகள் மற்றும் மெல்லிய வில்லைகள் பற்றியது. குழிவாடி மற்றும் குவிவாடிகளில் ஒளித்தெறிப்பு நடைபெறும் விதம், அவற்றின் குவியத்தூரம் ($f$), வளைவு ஆரை ($R$) போன்ற எண்ணக்கருக்கள் விளக்கப்படுகின்றன. குறிப்பாக, குழிவாடியின் முன்னால் வெவ்வேறு இடங்களில் பொருளை வைக்கும்போது உருவாகும் பிம்பங்களின் இயல்புகள் (மெய்/மாய, நிமிர்ந்த/தலைகீழான) ஆராயப்படுகின்றன.அடுத்து, ஒளியின் முறிவு பற்றியும், அதன் பிரயோகமான மெல்லிய வில்லைகள் (குவிவில்லை, குழிவில்லை) பற்றியும் கற்பிக்கப்படுகிறது

    PDF Handout for This Unit

  • கலவைகள்

    கலவைகள்

    தரம் 11, அலகு 3

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதார்த்தங்கள் எவ்வித இரசாயனப் பிணைப்புமின்றி கலந்திருக்கும்போது கலவை உருவாகிறது. இவை ஏகவினக்கலவை (உதாரணம்: உப்புக்கரைசல்) அல்லது ப்ல்லினக்கலவை (உதாரணம்: சேற்று நீர்) என இருவகைக் கலவைகளாகக் காணப்படலாம்

    இவ்வலகில் முக்கியமாகப் பின்வருவன விளக்கப்படுகின்றன:

    • கரைசல்: கரைப்பான் மற்றும் கரையம் சேர்ந்த கலவை. இதில் திணிவு/திணிவுச் சதவீதம், திணிவு/கனவளவுச் சதவீதம் மற்றும் மூலர் செறிவு ஆகியவற்றை கணிக்க மாணவர்கள் பழகுகின்றனர்.
    • கலவைகளைப் பிரித்தல்: கலவையில் உள்ள கூறுகளைப் பிரித்தெடுக்க அவற்றின் கௌதிக இயல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பகுதிப்பட் காய்ச்சி வடித்தல் (மசகு எண்ணெய் சுத்திகரிப்பு), நீராவி மூலம் காய்ச்சி வடித்தல் (கறுவா எண்ணெய்) மற்றும் கரைப்பான் பிரித்தெடுப்பு முறைகள் இங்கு விரிவாகக் கற்பிக்கப்படுகின்றன.

    PDF Handout for this Unit

  • மின்காந்தவியலும் தூண்டலும்.

    மின்காந்தவியலும் தூண்டலும்.

    மின்னோட்டம் பாயும் கடத்தியைச் சுற்றி ஒரு காந்தப்புலம் உருவாகும் என்பதை இப்பாடம் விளக்குகிறது. நேர்க்கடத்தி மற்றும் சுருள் (Solenoid) வழியே மின்னோட்டம் பாயும்போது உருவாகும் காந்தப்புலத்தின் திசையைத் துணிய வலக்கை உள்ளங்கை விதி அல்லது மின்காந்த விதி பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வலகின் மிக முக்கியமான பகுதிகள்:

    • மோட்டார் விளைவு: காந்தப்புலத்திலுள்ள கடத்தியொன்றின் ஊடாக மின்னோட்டம் பாயும்போது அதன் மீது ஒரு விசை தொழிற்படும். இது மின்மோட்டார்கள் மற்றும் ஒலிபெருக்கிகளின் தத்துவமாகும். இதன் திசையைத் துணிய பிளமிங்கின் இடக்கை விதி பயன்படுகிறது.
    • மின்காந்தத் தூண்டல்: ஒரு காந்தப்புலத்தினுள் கடத்தியொன்றை அசைக்கும்போது அல்லது காந்தப்பாயத்தை மாற்றும்போது மின்னியக்கவிசை (மின்னோட்டம்) தூண்டப்படும். இது மின்னியற்றிகளின் (Generator) தத்துவமாகும். இதன் திசையைத் துணிய பிளமிங்கின் வலக்கை விதி பயன்படுகிறது.

    PDF Handout for unit 13

  • அமிலம் மூலம்

    நீர்க்கரைசலில் H+அயனிகளை விடுவிக்கும் பதார்த்தங்கள் அமிலங்கள் எனப்படும். இவை புளிப்புச் சுவையுடையவை, நீல லிட்மஸைச் சிவப்பாக மாற்றும். நீர்க்கரைசலில் OH அயனிகளை விடுவிப்பவை மூலங்கள் எனப்படும் (நீரில் கரையும் மூலங்கள் காரங்கள்). இவை கைக்கு வழுவழுப்புத் தன்மையைத் தருவதுடன், சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றும். ஒரு கரைசலின் அமில அல்லது மூலத் தன்மையை அளவிட pH அளவீடு (0-14) பயன்படுத்தப்படுகிறது.

    அமிலமும் மூலமும் ஒன்றுடன் ஒன்று தாக்கம் புரிந்து உப்பையும் நீரையும் தரும் செயல்முறை நடுநிலையாக்கல் எனப்படும்.

    Acid + Base > Salt + Water

    இவ்வலகில் அன்றாட வாழ்வில் அமில, மூலங்களின் பயன்பாடுகள் (உதாரணமாக: வயிற்று அமிலத்தன்மைக்கு மக்னீசியம் பால் பயன்படுத்தல்) மற்றும் மண்ணின் pH பெறுமானத்தைச் சீராக்குதல் போன்ற விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன.

    PDF Handout For Unit 7